Wednesday, November 18, 2015

காக்கா கேள்வி

 
காக்கா கேள்வி

ழைக்காலம் வருவதற்க்கான அறிவிப்பாக சாரல் அடிக்க தொடங்கியது... மரத்திலிருந்த தாய்க்காக்கவிற்க்கு தொடங்கியது மனக்கவலை.. தன் குஞ்சு கேட்க்கும் கேள்விக்கு, பதில் சொல்லி மாளது போகும் தன் நிலையை நினைத்து.

தாய்க்கு தெரியும் குஞ்சு கேட்க்கும் கேள்வியெல்லாம் நான் சின்னதாக  இருந்தபொது என் தாயிடம் கேட்டதுதான்,தனக்கு தன் தாயிடம் கிடைத்த  பதிலை தான், தன் குஞ்சுக்கு சொன்னாலும் அந்த பதில் உண்மையா இல்லையா என தான் அறிய முனையாததால்,அது சரியானது என அறுதியிட்டு கூறமுடியாததை நினைத்து கூடுதல் கவலையானது.ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கேள்வியுடன் வரும்...

இது மழைக்காலமானதால்,குஞ்சின் கேள்வி வானவில்லை பற்றியானது,அம்மா... குஞ்சு கேட்டது அந்த வானவில்ல வரைஞ்சது ஆருமா.....அம்மா சொன்னது,அது ஆரும் வரைஞ்சது இல்லமா..அது மழ வரும் போது தானா வரும் மழ போனதும் தானா போயிரும்..குட்டிக்கு அந்த பதிலில் திருப்தியிலலைங்கருது அதோட முகத்திலிருந்து தாயிக்கு மனசிலாச்சு..காரணம் தான் சின்னதா இருந்த போது தன் தாய் சொன்ன பதில் தனக்கு அப்போது திருப்தியில்லாதிருந்ததை நினைத்தும்...தான் அது உண்மையா என அறிய வானவில்லை தொட முயற்ச்சி செய்யாமல் அம்மா சொன்ன பதிலை நம்பி அதையே தன் குஞ்சுவுக்கும் உண்மை உணராமல் சொன்னது...ஆனா இந்த காக்ககுஞ்சு தன் அம்மாவ போல இல்ல..அது வானவில்ல தொட முயற்ச்சித்தது..தினமும் கொஞ்சதூரம் மேல பறக்கும் ..அதுக்கப்பறம் முடியாம கீழ வரும்...முயற்ச்சிய கைவிடாம தினமும் பறந்து பறந்து ஒரு நாள் அது வானவில் பக்கமா போனது..அதோட மனசில இப்பவும் யாரோ கட்டியான பேப்பரிலோ இல்லைனா கண்ணாடியிலோ வரச்சு வெட்டி  ஒட்டி வச்சு இருப்பதாக தான் தோணிச்சு..

 
தீவிரமான முயற்ச்சியினால ஒருமழ நாள் வேகமாக பறந்து போயி வானவில்ல தானோட அலகால அதுக்கு நல்ல அழுத்தம் கொடுத்து,மனசில அது வரஞ்சு வச்சதுன்னு நினைச்சதுனால,தொட்டது...தொட்டதுங்கறதவிட இடிச்சதுன்னு சொல்றதுதான் சரியா இருக்கும், நேரா சிவப்பு நிறத்த இடிச்ச இடியில அதோட அலகு வளஞ்சு சிவப்பு நிறமா மாறி வானவில்லுக்கு உள்ளே போயி வெளியே வந்தது..வரும்போது வானவில்லின் மற்ற நிறங்களையும் உள்வாங்கி பஞ்சவர்ணக்கிளியா கீழே வந்தது......உண்மைய உணர்வதற்க்கான் முயற்ச்சி காக்ககுஞ்சுக்கு புதிய மாற்றத்தை/பரிணாமத்தை கொடுத்தது...   


ஹாய் நா.....இப்ப பஞ்சவர்ணகிளி
 

Thursday, July 16, 2015

குதிரை வரிகுதிரையான கதை


குதிரை வரிகுதிரையான கதை.......
 
 

கொள்ளுதின்னுகொழுத்த,கம்பீரமான,வசீகரமான மற்றும் பளபளப்பான உடலைக்கொண்ட குதிரைங்க இரண்டு காட்டிலே வேகமாக புழுதிவாரி துற்றியபடி,வால் மற்றும் பிடரியிலும் உள்ள மயிர்கள் எதிர்திசையில் பறக்க,ஒன்றுக்கொன்று சளைக்காமல் டொக்.....டொக்.... என்று சப்தம் எழுப்பியபடி ஒடியது. உடம்பு அத்துணை வேகத்தில் இயங்கி கொண்டிருந்தாலும்,மனது வேறு திசையில் பயணிக்க தொடங்கியது...கறுப்பு குதிரையின் மனது வெள்ளை குதிரையின் நிறத்தின் மீதும்,வெள்ளை குதிரையின் மனது கறுப்பு குதிரையின் தோலின் பளபளப்பின் மீதும் மோகம் கொள்ள தொடங்கியது. அப்படியே பலமைல்தூரம் கடந்தபோது இரண்டும் களைப்படைந்தது,பின்னர் வேகத்தை மெதுவாக குறைத்து,ஓடும் போது இருந்த அதே கம்பீரத்தோடு நடக்கத்தொடங்கியது.....

 

அதிக தூரம் ஒடியதின் காரணமாக உடம்பு வலிக்க...மோக எண்ணத்தின் காரணமாக மனதும் வலிக்க... களைப்படைந்த இரண்டும் இருப்பதற்க்கான இடத்தை தேடியது......தேடியது தேடியயுடன் கிடைப்பது இயற்கையின் நியதி என்ற அடிப்படையில்,அவைகளின் கண்ணில் அவை வந்த பாதையின் வலது பக்கத்தில் இருந்த ஆலமரம் கண்ணில் பட,அதை னொக்கி நடந்தது.அதனருகில் சென்று அதன் தணலில் காலைகளை மடித்து உடம்பை டப் என ஒலி எழுப்பியபடி இரண்டும் இருத்தியது...உடல் அசதியில் இருந்த சில நிமிடத்திலேயே உறங்க தொடங்கியது..ஆனால் இரண்டின் மனதோ சிந்திப்பதற்க்கான தேவையிருப்பதால் அதாவது மோகத்தின் மீதும்,அதன் காரணமான கலரின் மீதும்,பளபளப்பின்மீதும் சிந்தனையை ஓடவிட்டது..அப்படியே அசைப்போட்டபடியே உடம்புடன் மனதும் உறங்கதொடங்கியது,வேண்டுவது வேண்டியபடியே கிடைக்கும் என்ற இயற்கையின் நியதிப்படி,சிறுது னேரம் கழித்து இரண்டும் விழித்தபோது வெள்ளை குதிரையின் மீது கறுத்த வரியும்,கறுப்பின் மீது வெள்ளை வரியும் இருப்பது கண்டு இரண்டும் சந்தோஷத்தில் எழுந்தபோது கால்கள் சிறுது வளைந்து பழைய கம்பீரம் சற்று குறைந்தது போல தோன்றியது...இரண்டும் தங்களுடைய மோகத்தின் காரணமாக புதிய விலங்காக மாறியதை உணர்ந்தது...இப்போது தங்களைத்தாங்களே வரிகுதிரை என பெயரிட்டு கொண்டன...இந்த புதிய பரிணாமத்தில் ஆனந்தத்தில் திளைத்த சிறிது நேரத்தில் அதனதன் மனது பழைய கம்பீரத்தை பெருமையோடு நினைக்க புதிய பரிணாமத்தின் ஆனந்தத்தை இழக்கத்தொடங்கியது.......இருப்பில் இருப்பதை விட்டு மறுபடியும் இல்லாததை நோக்கி நகர தொடங்கியது மனம்.
ஐய்யயோ எப்படீருந்த நாம இப்படியாயிற்றோமே...........


 

 

Tuesday, May 20, 2014

DEMOCRACY IN INDIA

இந்திய ஜனநாயகம் ஓர் விநோதம் 2014 முடிவு

   31%   வாக்கு பெற்ற  பிஜேபிக்கு 282
   19.3% வாக்கு பெற்ற காங்கிரசுக்கு 44
   3.3%   வாக்கு பெற்ற அமுகவுக்கு 37
   3.3%   வாக்கு பெற்ற கம்யூனிஸ்ட்க்கு 9
   4.1%   வாக்கு பெற்ற பாஹுஜன் சமாஜ்ஜுக்கு 0
   வாழ்க இந்திய ஜனநாயகம் 

INDIAN DEMOCRACY A ?????? 2014 RESULT

31%    vote gives BJP-         282 seats
19.3% vote gives Congress-  44 seats
3.3%   Vote gives ADMK-     37 Seats
3.3%   Vote gives Communist- 9 seats
4.1%   Vote gives BSP            - 0  seats



Saturday, July 28, 2012

Investment in Mutual Fund

Invest your money in high growth with low risk,If ur age is less than 45,mutual fund could be the ideal investment.To understand more about mutual fund pl visit www.valueresearchonline.com.


Tuesday, July 3, 2012

I belongs to no religion

I belongs to no religion .Being stand on this statement only you can understand other religion path, of-course their holy books.otherwise what ever holy book you read ,you always try to find out mistake or/and comparison with each other. you will not reach anywhere,you will be in the same place where you were before reading.

Be with open mind and start reading. respect each and every religion, who knows any one path may be useful and take with you to god.GOD BLESS YOU ALL.

நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல.இந்த நிலையில் மட்டுமே மற்ற மதத்தை புரிந்துக்கொள்ளமுடியும்,புனிதநூல்களைக்கூட. இல்லையென்றால் நீங்கள் தவறான புரிதலையும் மற்றும்/அல்லது மத ஒப்பீடு மட்டுமே செய்யமுடியும்.எந்த புரிதலும் ஏற்ப்படாது.

திறந்த மனதோடு வாசிக்கவும்.ஏதொயொன்று உங்களை வழிநடத்தும் கடவுளை நோக்கி.கடவுளின்  ஆசி எப்போதும் உங்களை கைவிடாது.

Saturday, May 26, 2012

கார்டூனிஸ்ட் மதன் விலக்கம்

ஆன்ந்தவிகடனில் கேள்வி-பதில் செய்தவர்க்கு ஒரு வாசகனின் கேள்வியே விகடனில் இருந்து விலகுவதற்க்கு விகடனின் பதில் ஆக அமைந்தது வாசகனாகிய எனக்கு வருத்தமாக இருந்தாலும்,விகடனின் பதிலில் நியாயம் இருப்பதை மறுக்க முடியவில்லை.

அதேசமயம் மதனின் பொதுஅறிவு சார்ந்தபதில் மற்றும் கார்டூனும் இனிமேல் விகடனில் இருந்து விலகி இருக்கப்போவதும் வருத்தத்தை அளிக்கிறது.

Thursday, May 24, 2012

மூன்றாம் உலகப்போர் புத்தகம்

வைரமுத்து எழுதி ஆனந்த் விகடனில் கடந்த 40 வாரமாக வெளிவந்த சுற்றுச்சூழல் குறித்த தொடர் இப்பொழுது தனிப்புத்தகமாக ஜுலை 13ம் தேதி வெளியீடு.

இந்த புத்தகம் பற்றி வைரமுத்து சொன்னது:இது கலைத்தேவைக்காக  அல்ல,காலத்தின் தேவைக்காக எழுதியது.

இந்த தொடரை தொடர்ந்து படித்தவன் என்றமுறையில் எழுதுகிறேன் இந்த வாக்கியம் மிகச்சரியானது

தமிழ் தெரிந்தவர்கள் படிக்கவும்(கண்டிப்பாக),பாதுகாக்கவும்,பெருமைப்படவும் வேண்டிய படைப்பு.

இந்த படைப்பை தந்த திரு.வைரமுத்துக்கும்,வெளியிட்ட ஆன்ந்த்விகடனுக்கும் நன்றி