Wednesday, November 18, 2015

காக்கா கேள்வி

 
காக்கா கேள்வி

ழைக்காலம் வருவதற்க்கான அறிவிப்பாக சாரல் அடிக்க தொடங்கியது... மரத்திலிருந்த தாய்க்காக்கவிற்க்கு தொடங்கியது மனக்கவலை.. தன் குஞ்சு கேட்க்கும் கேள்விக்கு, பதில் சொல்லி மாளது போகும் தன் நிலையை நினைத்து.

தாய்க்கு தெரியும் குஞ்சு கேட்க்கும் கேள்வியெல்லாம் நான் சின்னதாக  இருந்தபொது என் தாயிடம் கேட்டதுதான்,தனக்கு தன் தாயிடம் கிடைத்த  பதிலை தான், தன் குஞ்சுக்கு சொன்னாலும் அந்த பதில் உண்மையா இல்லையா என தான் அறிய முனையாததால்,அது சரியானது என அறுதியிட்டு கூறமுடியாததை நினைத்து கூடுதல் கவலையானது.ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கேள்வியுடன் வரும்...

இது மழைக்காலமானதால்,குஞ்சின் கேள்வி வானவில்லை பற்றியானது,அம்மா... குஞ்சு கேட்டது அந்த வானவில்ல வரைஞ்சது ஆருமா.....அம்மா சொன்னது,அது ஆரும் வரைஞ்சது இல்லமா..அது மழ வரும் போது தானா வரும் மழ போனதும் தானா போயிரும்..குட்டிக்கு அந்த பதிலில் திருப்தியிலலைங்கருது அதோட முகத்திலிருந்து தாயிக்கு மனசிலாச்சு..காரணம் தான் சின்னதா இருந்த போது தன் தாய் சொன்ன பதில் தனக்கு அப்போது திருப்தியில்லாதிருந்ததை நினைத்தும்...தான் அது உண்மையா என அறிய வானவில்லை தொட முயற்ச்சி செய்யாமல் அம்மா சொன்ன பதிலை நம்பி அதையே தன் குஞ்சுவுக்கும் உண்மை உணராமல் சொன்னது...ஆனா இந்த காக்ககுஞ்சு தன் அம்மாவ போல இல்ல..அது வானவில்ல தொட முயற்ச்சித்தது..தினமும் கொஞ்சதூரம் மேல பறக்கும் ..அதுக்கப்பறம் முடியாம கீழ வரும்...முயற்ச்சிய கைவிடாம தினமும் பறந்து பறந்து ஒரு நாள் அது வானவில் பக்கமா போனது..அதோட மனசில இப்பவும் யாரோ கட்டியான பேப்பரிலோ இல்லைனா கண்ணாடியிலோ வரச்சு வெட்டி  ஒட்டி வச்சு இருப்பதாக தான் தோணிச்சு..

 
தீவிரமான முயற்ச்சியினால ஒருமழ நாள் வேகமாக பறந்து போயி வானவில்ல தானோட அலகால அதுக்கு நல்ல அழுத்தம் கொடுத்து,மனசில அது வரஞ்சு வச்சதுன்னு நினைச்சதுனால,தொட்டது...தொட்டதுங்கறதவிட இடிச்சதுன்னு சொல்றதுதான் சரியா இருக்கும், நேரா சிவப்பு நிறத்த இடிச்ச இடியில அதோட அலகு வளஞ்சு சிவப்பு நிறமா மாறி வானவில்லுக்கு உள்ளே போயி வெளியே வந்தது..வரும்போது வானவில்லின் மற்ற நிறங்களையும் உள்வாங்கி பஞ்சவர்ணக்கிளியா கீழே வந்தது......உண்மைய உணர்வதற்க்கான் முயற்ச்சி காக்ககுஞ்சுக்கு புதிய மாற்றத்தை/பரிணாமத்தை கொடுத்தது...   


ஹாய் நா.....இப்ப பஞ்சவர்ணகிளி