Thursday, July 16, 2015

குதிரை வரிகுதிரையான கதை


குதிரை வரிகுதிரையான கதை.......
 
 

கொள்ளுதின்னுகொழுத்த,கம்பீரமான,வசீகரமான மற்றும் பளபளப்பான உடலைக்கொண்ட குதிரைங்க இரண்டு காட்டிலே வேகமாக புழுதிவாரி துற்றியபடி,வால் மற்றும் பிடரியிலும் உள்ள மயிர்கள் எதிர்திசையில் பறக்க,ஒன்றுக்கொன்று சளைக்காமல் டொக்.....டொக்.... என்று சப்தம் எழுப்பியபடி ஒடியது. உடம்பு அத்துணை வேகத்தில் இயங்கி கொண்டிருந்தாலும்,மனது வேறு திசையில் பயணிக்க தொடங்கியது...கறுப்பு குதிரையின் மனது வெள்ளை குதிரையின் நிறத்தின் மீதும்,வெள்ளை குதிரையின் மனது கறுப்பு குதிரையின் தோலின் பளபளப்பின் மீதும் மோகம் கொள்ள தொடங்கியது. அப்படியே பலமைல்தூரம் கடந்தபோது இரண்டும் களைப்படைந்தது,பின்னர் வேகத்தை மெதுவாக குறைத்து,ஓடும் போது இருந்த அதே கம்பீரத்தோடு நடக்கத்தொடங்கியது.....

 

அதிக தூரம் ஒடியதின் காரணமாக உடம்பு வலிக்க...மோக எண்ணத்தின் காரணமாக மனதும் வலிக்க... களைப்படைந்த இரண்டும் இருப்பதற்க்கான இடத்தை தேடியது......தேடியது தேடியயுடன் கிடைப்பது இயற்கையின் நியதி என்ற அடிப்படையில்,அவைகளின் கண்ணில் அவை வந்த பாதையின் வலது பக்கத்தில் இருந்த ஆலமரம் கண்ணில் பட,அதை னொக்கி நடந்தது.அதனருகில் சென்று அதன் தணலில் காலைகளை மடித்து உடம்பை டப் என ஒலி எழுப்பியபடி இரண்டும் இருத்தியது...உடல் அசதியில் இருந்த சில நிமிடத்திலேயே உறங்க தொடங்கியது..ஆனால் இரண்டின் மனதோ சிந்திப்பதற்க்கான தேவையிருப்பதால் அதாவது மோகத்தின் மீதும்,அதன் காரணமான கலரின் மீதும்,பளபளப்பின்மீதும் சிந்தனையை ஓடவிட்டது..அப்படியே அசைப்போட்டபடியே உடம்புடன் மனதும் உறங்கதொடங்கியது,வேண்டுவது வேண்டியபடியே கிடைக்கும் என்ற இயற்கையின் நியதிப்படி,சிறுது னேரம் கழித்து இரண்டும் விழித்தபோது வெள்ளை குதிரையின் மீது கறுத்த வரியும்,கறுப்பின் மீது வெள்ளை வரியும் இருப்பது கண்டு இரண்டும் சந்தோஷத்தில் எழுந்தபோது கால்கள் சிறுது வளைந்து பழைய கம்பீரம் சற்று குறைந்தது போல தோன்றியது...இரண்டும் தங்களுடைய மோகத்தின் காரணமாக புதிய விலங்காக மாறியதை உணர்ந்தது...இப்போது தங்களைத்தாங்களே வரிகுதிரை என பெயரிட்டு கொண்டன...இந்த புதிய பரிணாமத்தில் ஆனந்தத்தில் திளைத்த சிறிது நேரத்தில் அதனதன் மனது பழைய கம்பீரத்தை பெருமையோடு நினைக்க புதிய பரிணாமத்தின் ஆனந்தத்தை இழக்கத்தொடங்கியது.......இருப்பில் இருப்பதை விட்டு மறுபடியும் இல்லாததை நோக்கி நகர தொடங்கியது மனம்.
ஐய்யயோ எப்படீருந்த நாம இப்படியாயிற்றோமே...........


 

 

No comments:

Post a Comment